LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C



ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, June 30, 2019

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்திற்கு முன்பாக  இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

ஏ-9 வீதியில் அருகில் சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் விடயத்தில் அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக எந்தவொரு கரிசனையையும் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இனியும் இதனை இழுத்தடிக்காமல் விரைவில் உரிய பதிலை வழங்க, அரசாங்கத்துக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7