
தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் யாழில் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லையென வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் உறவினா்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள், மாநாட்டு மண்டபத்திற்குள் நுழையாத வண்ணம் நுழைவாயில்களில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதுடன், விசேட அதிரடிப்படையினரும் அங்கு காணப்படுகின்றனர்.
