மட்டக்களப்பு கள்ளியங்காடு
ஸ்ரீ ஆஞ்சேநேயர் ஆலயத்தின் 108
சங்காபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது
மட்டக்களப்பு நகரில்
சிறப்பு மிக்க ஆலயமாக விளங்கும் மட்டக்களப்பு கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சேநேயர் ஆலயத்தின்
ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஜனன தினத்தை சிறப்பிக்கும் வகையில் 108 சங்காபிஷேக பூஜை நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது .
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெகதீஸ்வர
குருக்களின் தலைமையில் சிவஸ்ரீ
சி .கு .லவகுமார சர்மா , சிவஸ்ரீ பயிரதன் குருக்கள் இணைந்து விநாயர் வழிபாடுகளுடன் நடாத்தப்பட விசேட யாகம் மற்றும் விசேட
அபிசேகம் பூஜைகள் நடைபெற்றது
இதனைதொடர்ந்து பிரதான
கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்தியாகிய ஆஞ்சேநேயருக்கு அபிசேகம்
செய்யப்பட்டது.
பூசையினை தொடர்ந்து அடியார்களின்
ஆரோகரா கோசங்களுடன் 108 சங்காபிஷேக பூஜைகளும் தொடர்ந்து விசேட தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது
இன்று நடைபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஜனன தின சிறப்பு பூஜை வழிபாட்டில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்





