சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் அரச
ஹோமியோபதி வைத்திய நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்
தலைமையில் மட்டக்களப்பு புளியந்தீவு பகுதியில் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்
.உதயகுமார் , மற்றும் மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் மாநகர ஆணையாளர் கே
.சித்திரவேல் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம். தயாபரன் , பிரதி ஆமையாளர் என்
.தனஞ்சயன் , வைத்தியர்களான எம் எ எம் . முனீர் , வைத்தியர் செல்வி . பி பிரவினா மற்றும்
மாநகர் சபை உறுப்பினர்கள் , மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
மட்டக்களப்பு மாநகர சபையின்
அதி முக்கியமான வேலைத்திட்டங்களில் ஒன்றான இந்த ஹோமியோபதி
வைத்திய நிலையமாகும் இந்த வைத்திய நிலையம் இலங்கையி ன் 8 வது ஹோமியோபதி வைத்திய நிலையமாக இன்று மட்டக்களப்பில் திறந்து
வைக்கப்பட்டுள்ளது
உள்ளூராட்சி மன்றங்களில் மாநகர எல்லைப்பகுதியில் வாழ்கின்ற
பொதுமக்களுடைய வாழ்வினை அவர்களின் மனோரம்பியமான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்து
கொடுக்கின்ற அடிப்படை நிறுவனமாக மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்
இருக்கின்றன
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு
மாவட்ட மக்களின் உடல் ஆரோக்கிய சுகாதார நலன் கருதி சுகாதார
போஷனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் மட்டக்களப்பு நகரில் இந்த ஹோமியோபதி வைத்திய நிலையம் திறந்து
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது





