மேலும் வரலட்சுமி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிகுந்த கவனம் பெற்றன. குறிப்பாக “ரவுடி பேபி“ பாடல் ஏகோபித்த வரவேற்பு பெற்றது.
இந்த பாடல் படைத்த சாதனையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பகிர்ந்துள்ளார். அதில், “ரவுடி பேபி“ பாடலின் லிரிக்கல் வெர்ஷன் வெளியாகி 35 நாளில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது.
அண்மையில் வெளியான குறித்த பாடலின் காணொளியினை ஒரே நாளில் 7 மில்லியன் பார்வையாளர்களையும், 2 இலட்சத்து 88 ஆயிரம் லைக்குகளும் பெற்று சாதனை படைத்துள்ளது.






