
பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் உத்தரவின் பேரில் இராணுவ செயலகம் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியியையும் அவர் தொடரவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோன்று யாழ்.படைகளின் தலைமையக தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜூலை 17ஆம் திகதி முதல் பாதுகாப்பு அமைச்சில் மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் புதிய இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதுடன் 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, யாழ். படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இராணுவத் தலைமையகத்தில் ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு வன்னிப் படைகளின் தலைமையக தளபதியாகவும் 24 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு மேற்கு படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று முதன்மை கள பொறியலாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஆர்.கே.பி பீரிஸ், இராணுவ தலைமையக ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாகவும் 11ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய, மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார, இராணுவத் தலைமையகத்தின் முதன்மை கள பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
54 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சேனாரத் பண்டார, 11ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை 14 பிரிகேடியர்களின் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
