
இடம்பெற்ற குழு மோதலில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுன்னாகம். சபாபதிப்பிள்ளை முகாம் பகுதியிலேயே நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வலி.வடக்கு பகுதிகளிலிருந்து கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் குறித்த முகாமில் வசித்து வருகின்றார்கள். அவர்கள் மத்தியில் ஏற்பட்ட தர்க்கம் பின்னர் மோதலில் முடிவடைந்துள்ளது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
