
சென்ற விமானம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஓடுபாதையில் இருந்து விலகி புல்வெளிக்குள் பாய்ந்தது.
எனினும் விமானத்தை இயக்கம் கட்டுக்கடுத்தப்பட்ட நிலையில், குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் 183 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் டுபாயில் இருந்து 183 பயணிகளுடன் இன்று மாலை கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு விமான நிலையம் நோக்கிச் சென்றது.
விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் தரையிறங்கியதும் பயணிகளை இறக்கிவிடும் முனையத்தை நோக்கி விமானம் ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்து. அப்போது எதிர்பாராத வகையில் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற விமானம், அங்கிருந்த புல்வெளிக்குள் பாய்ந்தது.
இதையடுத்து உடனடியாக மீட்புப் படையினர் தீயணைப்பு மற்றும் அம்பியூலன்ஸ் வாகனங்களுடன் அந்த இடத்துக்கு விரைந்தனர். அத்துடன், விமானத்தின் அவசர ஏணி வழியாக 183 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மங்களூரு விமான நிலைய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
