கொரோனாவை பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறியும் வெளியே சுற்றுபவர்களை பிடித்து பொலிஸார் எச்சரித்து அனுப்புகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி வருகின்றனர். இதனிடையே அங்கு வெளியே சுற்றிய நபர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார், அவர்களுக்கு மாலை அணிவித்து நிற்க வைத்தனர். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுரை கூறி அவர்களை அனுப்பிவைத்தனர்.