LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, May 2, 2020

சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி!

ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கிக்
கொண்டிருப்பவர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், இடம் பெயர்ந்த பணியாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்காக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷ்ராமிக் சிறப்பு ரயில் என்ற பெயரில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு கட்டணம் உண்டு. வழக்கமான ரயில்களைப் போல் அல்லாமல், Point to Point ரயில்களாக இவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு செல்லும் பயணிகள், உரிய மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர் என்றும், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை புறப்படும் இடத்திற்கு உரிய மாநில அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு புறப்படும் ரயில், சென்று சேர்ந்தவுடன் அங்கு பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே, வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7