குறித்த சுற்றுநிருபத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதால் அதன் விதிகளை செயல்படுத்த தேவையில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் குறித்த சுற்றுநிருபம் திருத்துவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசாங்க அதிகாரிகளின் ஆடைகள் தொடர்பில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கடந்த மாதம் 31 ஆம் திகதி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது.
இந்த சுற்றுநிருபம் தொடர்பாக பலத்த எதிர்ப்புக்களும் பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






