ழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு கமரா அமைப்பொன்றினை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடுகள் தனியார் நிறுவனமொன்றின் ஊடாக பொருத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போதைய நிலையில் இடம்பெற்றுவருவதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 110 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது காணப்படும் பாதுகாப்பு கமரா அமைப்பு 10 வருடங்கள் பழமையானது என்பதால், இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு கமரா அமைப்பு பொருத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.






