
ஏற்படுத்தியுள்ள பயங்கரவாதத்தை தடுக்கவே அவசரகால சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டும் என அரசாங்கம் பிரேரணை கொண்டு வந்திருக்கின்றது.ஆனால் பிரேரணை கொண்டுவருவதன் காரணத்தை தெரிவிக்கும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றில் இல்லை.
இந்த நடவடிக்கையானது அரசாங்கம் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவே தெரிகின்றது. பாதுகாப்பு குறித்து பொறுப்புடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் செயற்படாததன் காரணமாகவே இன்று சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டடிருக்கின்றது.
மேலும் பயங்கரவாதத்தை தடுக்கவும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யவும் மாத்திரம் அவசரகால சட்டத்தை பயன்படுத்தவேண்டும்.
மாறாக அரசாங்கம் இதனை பயன்படுத்திக்கொண்டு பொது மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை தடுக்க பயன்படுத்தக்கூடாது” என கூறினார்.
