
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் இடம்பெற்றபோதே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்டவிரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் வைத்தியர் மொஹமட் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
விசாரணைகளின் அடிப்படையிலேயே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வைத்தியர் மொஹமட் ஷாபி, தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
