
இலக்காகிய மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி , அயலவர்களின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க கணவன், 40 வயதுடைய மனைவியுடன் தினமும் தகராற்றில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகராறு இன்று அதிகரித்த நிலையிலேயே மனைவியின் வயற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தாயார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும், கத்தி குத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
