விமானத்தில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம்- ஜோர்கத் தளத்திலிருந்து நேற்று மதியம் 12.25 மணியளவில் புறப்பட்டு சென்ற என்டோனோவ் எ.என்- 32 ரக விமானம் 13 பேருடன் காணாமல் போயுள்ளது. மேலும் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ராஜ்நாத்சிங் மேற்கண்டவாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,
“காணாமல் போயுள்ள இந்திய விமானப்படை விமானம் குறித்து, விமானப்படை துணைத்தலைவர் மார்ஷல் ராகேஷ் சிங்கிடம் கேட்டறிந்துள்ளேன். அவர்களுடன் தொடர்பிலும் இருந்து வருகிறேன்.
மேலும் விமானத்தில் பயணித்த அனைவரும் எந்ததொரு அனர்த்தங்களுக்கும் முகம் கொடுத்திடாமல் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்” என ராஜ்நாத்சிங் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.





