டெல்லியிலுள்ள அமுலாக்கத்துறை அலுவலகத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தற்போது முன்னிலையாகியுள்ளார்.
ராபர்ட் வதேராவிடம் சாட்சியமொன்றை பெற்றுகொள்வதற்காக, அமுலாக்கத்துறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அதற்கமையவே ராபர்ட் வதேரா தற்போது அமுலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் வாங்கியமை மற்றும் சட்டவிரோத பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் ராபர்ட் வதேரா மற்றும் உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து அமுலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





