ஆப்கானிஸ்தானில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு 887 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கனி, நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய உரையில் இதனை அறிவித்துள்ளார்.
அத்தோடு, இருதரப்பு உறவை மேம்படுத்தும் விதமாக இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்குத் தாம் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான் தளபதிகளுக்குப் பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதாகக் காபூல் குற்றஞ்சாட்டி வந்துள்ளது. ஆனால் இஸ்லாமாபாத் அதை மறுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.





