
முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையிலிருந்து, உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டீ அப்ரூ, விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு விசாரணையிலிருந்து அவர் விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி, மருதானையில் இடம்பெற்ற மக்கள் பேரணியொன்றில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்து பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர உள்ளிட்ட மூவரினால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
