
நிறுத்துவதற்கு, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மலிந்த செனவிரத்ன என்பவரால் குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கட சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இவ்விடயத்தில் உத்தரவை பிறப்பிக்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கட சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், பாரிய மனித உரிமை மீறல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளமையினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மலிந்த செனவிரத்ன குறித்த மனுவின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
