
சுவிஸின் பாஸல் தேவாலயத்தின் கீழே தொல்பொருள் ஆய்வாளர்களால் இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த எலும்புக் கூடுகளானது இரண்டு செங்கல் கல்லறைகளில் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை பாஸல் பகுதிகளில் குடியிருந்த மக்களின் கல்லறையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த தேவாலயமானது 1274 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பாஸல் பகுதியில் பிரபலமான தேவலயமாக உருமாறியதுடன், பொருளாதாரத்தில் உச்சத்தையும் தொட்டுள்ளது.
எனினும், 1860ஆம் ஆண்டு தேவாலயம் தவிர்ந்த, ஏனைய கட்டடங்கள் அனைத்தும் இடித்து தரை மட்டமாக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
