
காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜேர்மனியின் மிக முக்கிய நகரமான Monheim இல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காற்று மாசுவைக் குறைக்கும் நோக்கில், மக்கள் தங்கள் கார்களை வீட்டில் விட்டு விட்டு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த அதிரடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கடந்த ஆண்டு ஜேர்மன் அரசு தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் பொதுப்போக்குவரத்தை அறிமுகம் செய்யும் திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தது.
