
மத்திய லண்டன், மான்சன் ஹவுசில் நேற்று இடம்பெற்ற பிளாக் ரை (black-tie) நிகழ்வில் நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் உரையாற்றிக்கொண்டிருந்தபோது கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குழப்பம் விளைவித்தனர்.
இவ்வாறு குழப்பம் விளைவித்தவர்களில் ஒருவரான கிரீன்பீஸ் ஆர்வலரான ஜனற் பேர்கரின் கழுத்தைப் பிடித்து அமைச்சர் மார்க் பீல்ட் வெளியேற்றியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து ஜனற் பேர்கர் கூறுகையில்; அமைச்சர் மார்க் பீல்ட் இவ்வாறு செய்ததைப் பற்றி அவர் சிந்திக்கவேண்டும். மேலும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முகாமைத்துவ வகுப்புகளுக்கும் செல்லவேண்டுமெனப் பரிந்துரைப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் மார்க் பீல்ட் தனது கழுத்தைப் பிடித்து வெளியேற்றியதை பொலிஸில் முறையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
