இமயமலையில் பனி உருகுவது கடந்த 2000ஆம் ஆண்டைப் போல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்





