LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, June 22, 2019

தமிழ்நாட்டில் கடும் மழை – மக்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் அக்னி வெயில் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அவசியமான காரணங்கள் இன்றி வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வடபழனி, மீனம்பாக்கம், வேளச்சேரி, அமைந்தகரை , மேடவாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரத்தில், தாம்பரம் சாலை, செங்கல்பட்டு சாலை, வாலாஜாபாத் குன்றத்தூர், திருமுடிவாக்கம், மாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதேபோல் திருவண்ணாமலையில், வந்தவாசி, பொன்னூர், இளங்காடு செம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலம் மழை பெய்துவருவதோடு திருவள்ளூர், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

வேலூரில் அரக்கோணம், சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7