LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 14, 2019

இணையத்தளங்களில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வில் தகவல்!

இணையத்தளங்களில் வரும் தகவல்களில் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை என அண்மைய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச ஆளுமை கண்டுபிடிப்பு மையம் இந்த கருத்துக் கணிப்பினை முன்னெடுத்திருந்தது.

86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைத் தான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில் தான் அதிகமாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இணையதளங்கள் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அதேநேரத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் எதிரான மனப்பான்மையை உருவாக்கும் இம்மாதிரியான செயல்களை அரசாங்கமும், சமூக வலைதளங்களை நடத்தி வரும் நிறுவனங்களும் தடுக்க வேண்டும் என இணையத்தளப் பயனாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

25 நாடுகளில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையவாசிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பொய்யான தகவல்களை பரப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரியவந்துள்ளது.

முக்கியமாக பேஸ்புக்கில் தான் அதிகமாக பொய்யான தகவல்கள் உலவுகின்றன. மேலும் யூடியூப், வலைப்பதிவுகள் மற்றும் ட்விட்டரிலும் வலம் வருகின்றன.

எகிப்தியர்கள் இந்த பொய்யான தகவல்களால் அதிகமாக ஏமாறுகின்றனர். மற்றவர்களை காட்டிலும் பாகிஸ்தானியர்கள் விழிப்பாக உள்ளனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கருத்து கணிப்பு, சர்வதேச ஆளுமை கண்டுபிடிப்பு மையத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21, முதல் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 10, வரை தனிநபர் மற்றும் இணையதள நேர்காணல் மூலமாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7