LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 14, 2019

ஒரு நாள் திருமணத் திட்டம்’ நெதர்லாந்தில் அறிமுகம்!

சுற்றுலா செல்பவர்களைக் கவரும் வகையில் அதிரடித் திட்டம் ஒன்றை நெதர்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தைச் சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாள் திருமணம் செய்து வைக்கும் திட்டம் ஒன்றே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எவ்வித சட்டப்பூர்வமான அம்சங்களும் உள்ளடக்கப்படாமல் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்தத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிக்கும் உள்ளூர்வாசி ஒருவருக்கும் சுமார் 35 நிமிடங்களுக்கு திருமணச்சடங்கு நடத்தப்படும். பின்னர் ஒருநாள் திருமணம் செய்த நபரை ‘தேனிலவு’ என்ற பெயரில் ஆம்ஸ்டர்டாமின் அறியப்படாத பல சுற்றுலாமையங்களுக்கு அழைத்துச் சென்று அந்த உள்ளூர்வாசி காண்பிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்துக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் நிலையில் இப்புதிய திட்டமானது இன்னும் பலரை கவர்ந்திழுக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு, சுமார் 21 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஆம்ஸ்டர்டாமுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சுற்றுலா செல்பவர்கள் பொதுஇடங்களில் குப்பை போடுதல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற இடையூறுகளை விளைவிப்பதால் பலவிதமான தொற்றுநோய் அபாயங்கள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7