கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மாடு வெட்டும் கொல்களன் குழியொன்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது 4 ஊழியர்கள் விசவாயு தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று புதிய அரச பொது ஊழியர் சங்கத்தினால் அந்த ஊழியர்களுக்கான நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
அச் சங்கத்தின் தலைவர் செ. செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத தலைவர்கள், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், நகரசபை தலைவர் இ.கௌதமன், நகரசபை உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ் விருட்சத்தின் தலைவர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.






