விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்று மற்றுமொரு பேருந்தினை முந்திச்செல்ல முற்பட்ட போதே இன்று(சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






