புள்ளிபட்டியலில் 6-வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் 8-வது இடத்திலுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று டெளடானில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சைத் தீர்மானித்தது
அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 321 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பாக ஷாய் ஹோப் 96 ஓட்டங்களையும் எவின் லூயிஸ் 70 ஓட்டங்களையும் சிம்ரான் ஹெட்மியர் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக மொஹமட் சைபுதீன் மற்றும் முஸ்டபிஸீர் ரஹ்மான் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனை அடுத்து 322 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
