
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது, “எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாதவேளை தெரிவித்திருக்கின்றார்.
எனது தாய்க்கு சகோதரர் இல்லை, இதுபோன்ற பொய்யான பிரசாரங்களை இங்கு விமல் வீரவன்ச தொடர்ச்சியாக கூறிவருகின்றார்.
குண்டுகள் வெடித்த நாளிலிருந்து விமல் வீரவன்ச இவ்வாறான பொய்களை சொல்லி சொல்லி இனங்களுக்கிடையே குரோதத்தையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதில் முனைப்புடன் செயற்படுகின்றார்.
அவர் சொல்லுவது எல்லாம் அப்பட்டமான பொய்யாகும். எனவேதான் அவர் எனக்கு எதிராக எந்தவிதமான முறைப்பாடுகளையும் பொலிஸில் இதுவரை செய்யவில்லை.
நாடாளுமன்றில் சிறைப்புரிமையை பயன்படுத்தி இவர் மேற்கொள்ளும் இவ்வாறான பொய் பிரசாரங்களை ஊடகங்களும் மக்கள்மத்தியில் தொடர்ச்சியாக கொண்டு செல்கின்றது.
எனது அம்மாவுக்கு எந்தசகோதரரும் இல்லை எனவும். இவ்வாறான சம்பவதுடன் எந்ததொடர்பும் இல்லை எனவும் நான் பொறுப்புடன் இங்கு கூறவிரும்புகின்றேன்.
அதுமாத்திரமின்றி இது தொடர்பிலான உண்மைகள் வெளிவரவேண்டும் எனவும் விரும்புகின்றேன்” என அவர் கூறினார்.
