
குறித்த கலந்துரையாடல் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் காசிம் தெரிவித்துள்ளார்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சுப் பதவிகளை மீளப் பெற்றுக் கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் அண்மையில் பதவி விலகிய அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.
எனினும் இந்தக் கலந்துரையாடலானது எவ்வித இணக்கப்பாடுமின்றி சிறிது நேரத்திலேயே நிறைவுப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
