
அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
அதிரடிப்படையினரின் வாகனம்வீதிக்கு ஏற முற்பட்டபோது புகையிரத வீதி வழியாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் காயமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்தில இருந்து விசேட அதிரடிப்படையினர் விபத்துக்குள்ளான வாகனத்தை எடுத்துக்கொண்டு அவ்விடத்தினை விட்டு சென்றிருந்தனர்.
இதன் பின்னரே பொலிஸார் அவ்விடத்திற்கு வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
