
நேபாளம்- காத்மாண்டுவிலுள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் குறித்த யோகா நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் 17,600 அடி உயரத்தில் பனிகட்டிகள் உறைந்த பகுதியில் மலையேறும் வீரர்கள் யோகா செய்துள்ளனர்.
அதேபோன்று நேபாளத்திலுள்ள சியான்போக் பகுதியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
