
அந்தவகையில், மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதானால் ஊடகங்கள் முன்னிலையில் இடம்பெறவேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி வைத்தியர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
இதைக் கண்டித்து அரசு வைத்தியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாளை காலை முதல் 24 மணிநேரங்கள் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய மருத்துவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையிலி், பேச்சுவார்த்தை நடத்த மம்தா பானர்ஜி எங்கு அழைத்தாலும் செல்லத் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ள வைத்தியர்கள், ஆனால் பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் முன்னிலையிலேயே பேச்சு இடம்பெறவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர்.
