
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடையணிந்து வெள்ளை நிற ரோஜாக்களையும் ஏந்தியவாறு மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹொங்கொங்கில் முக்கிய வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இதற்கு எதிராக நாடு பூராகவும் மாபெரும் போராட்டகள் இடம்பெற்றன. இந்த நடவடிக்கையானது ஹொங்கொங்கில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தும் என மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் குறித்த சட்டமூலத்தை கைவிடுவதாக ஹொங் கொங் ஜனாதிபதி கேரி லாம் நேற்று அறிவித்த நிலையில் அவரை பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்து போராட்டம் இடம்பெற்றுவருகிறது.
