யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பரப்பில் வைத்து பெருமளவான கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து கடல்வழியாக கடத்திச் செல்லப்படவிருந்த 232 கிலோகிராம் கேரளா கஞ்சா இன்று (சனிக்கிழமை) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
தேசிய போதை தடுப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த கடத்தலை முறியடித்துள்ளனர்.
கஞ்சாப் பொதிகளுடன் குறித்த சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.






