இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் நாளை வெளியாகாது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே இப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையகத்துக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் முறைப்பாடு செய்துள்ளன.
ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் ஆணையகத்துக்கு கடிதம் அனுப்பினர். அத்துடன் இதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி, மும்பை உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது மும்பை உயர் நீதிமன்றில் தேர்தல் ஆணையகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு படத்தை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மும்பையில் உள்ள சினிமா தணிக்கை குழுவினருக்குதான் உண்டு. இதில் நாங்கள் தலையிடுவதற்கு எதுவுமில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படம் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
