தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று (வியாழக்கிழமை) திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், தி.மு.க.வால் முடியாதது என்னால் முடியும். உப்பு நீர் இங்குள்ள மக்களின் உயிர் நீராக உள்ளது. அந்த உயிர் நீரில் தாமரை நிச்சயமாக மலரும் என அவர் கூறினார்.
மேலும், கனிமொழிக்கே தூத்துக்குடி புதிய இடம் என்றும் தான் இந்த மண்ணின் மகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஆளும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சியின் தமிழக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
