
இதன்படி இத்தேர்தலில் ‘சகி மத்தன் கேந்திராஸ்’ எனும் திட்டத்தின் கீழ், பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச் சாவடிகளை அமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 48 தொகுதிகளிலும் மகளிர் வாக்குச்சாவடி அமைக்கப்படுவதுடன், பெண் வேட்பாளர்களை கவரும் வகையில் ரங்கோலி உள்ளிட்ட கலை வேலைப்பாடுகளால் அலங்கரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குறித்த பகுதியில் அதிகளவான பெண் வாக்களர்கள் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
