ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.அத்துடன் அவர் பதுக்கியிருந்த இடத்திலிருந்து வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, அவர்கள் அங்கு விரைந்து தேடுதலை மேற்கொண்ட படையினர், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதியை கைது செய்தனர்.
விசாரணையில், கைதான பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதும், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ரமிஸ் அகமது தர் என்பதும் தெரிய வந்தது.





