கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நிஹால் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
அனுபவமிக்க நிர்வாக சேவை அதிகாரியான நிஹால் ரணசிங்க, இதற்கு முன்னர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





