வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர், வவுனியா மாவட்ட தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசார தேரர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் இந்த பௌத்த மாநாடு நடைபெறவுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த பௌத்த மாநாடு, வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தின் கீழான புத்தசாசன அமைச்சு, பிரதேச அரசியல் தலைவர்கள், முப்படையினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது.
வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் நாளை காலை 8.15க்கு சமய வழிபாடுகளின் பின்னர் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுடனான மத அனுஷ்டானங்களோடு இம்மாநாடு நடைபெறவுள்ளது.
