
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தியினையும், நிர்வாகத்தினையும் விரிவுபடுத்தும் வகையில் புதிய எல்லை நிர்ணயம் குறித்த கூட்டத்தில் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது.
மேலும் இரண்டு, புதிய பிரதேச சபைகள் மற்றும் ஒரு நகர சபை ஆகியவற்றை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்பிரகாரம் புதிய எல்லை நிர்ணயத்திற்கான சிபார்சுகள், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலர் குறிப்பிட்டுள்ளார்.
