இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “குறித்த வேட்புமனுக்களில் 655 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தவர்களில் 305 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதுடன் 213 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 43 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நீலகிரியில் குறைந்தபட்சமாக 10 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 44 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
முறைகேடுகளை தடுப்பதற்காக, தேர்தல் பறக்கும் படையினர் மார்ச் 27ஆம் திகதிவரை நடத்திய சோதனைகளில் சுமார் 50.20 கோடி ரூபாய் பணமும் 223 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.






