கவனிப்பாரற்றுக் காணப்பட்ட இந்த மல்ஹம் குகையானது 6.2 மைல் நீளம் கொண்டது. இஸ்ரேலின் மிகப்பெரிய மலைத்தொடரான சோடோமின் வழியாக சாக்கடல் நோக்கி இந்த உவர்க் குகை செல்கின்றது.
குன்றின் மேற்பரப்பில் மழைநீர் விழுந்து பாறையின் விரிசல் ஊடாகச் செல்லும் நீர் குகைக்குள் வழியும்போது உப்பாக மாறுகின்றது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இஸ்ரேலிய குகை ஆராய்ச்சியாளர்களின் குழுவில் இருந்த யோவ் நெகேவ் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆய்வினை நிறைவுசெய்ய ஒரு ஆராய்ச்சியாளர்களின் குழுவை அமைத்தார்.
அந்தக்குழு குறித்த இந்தக் குகையில் ஆராய்ச்சியை மேற்கொண்டபொழுது ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் போஸ் லாங்க்போர்ட் (Boaz Langford) தான் உண்ட பாஸ்தா சுவையில்லாமல் இருந்ததால் குகையினுள்ளே காணப்பட்ட உப்புப்பாறையை உடைத்து பயன்படுத்தியதன் மூலம் அது ஒரு உவர்க் குகை என்பதைக் கண்டறிந்தார்.






