LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 29, 2019

டாக்கா கட்டிட தீ பரவல் : உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு

டாக்காவில் உயர் மாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அதில் சிக்கி 19 பேர் வரை உயிரிழந்திருப்பதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தின் போது மூச்சுத் திணறல் மற்றும் எரிகாயங்கள் காரணமாகவே இந்த அளவிற்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 70 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் 22 மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அந்த கட்டிடத்தில் அதிகளவான மக்கள் சிக்கியுள்ளதாக பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தெரிவித்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது வர்த்தக கட்டிடங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதன் காரணமாக அங்கு பெரும் சனநெருக்கடி ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் 9 ஆம் 10 ஆம் மாடிகளில் இருந்து பலர் கீழே குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு வாகனங்கள் டாக்காவின் பனானி பகுதியில் உள்ள கட்டிடத்தின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியின் ஏனைய பாதைகள் மூடப்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எப்.ஆர் டவர் எனப்படும் குறித்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் திடீரென இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதுடன், காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் 22 மின்னுயர்த்திகளின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களை கீழே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், நீரைப் பாய்ச்சி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், ராணுவத்தினர், வான்படையினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரும் இந்த முயற்சியில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இதேபோன்று கடந்த மாதம் தலைநகருக்கு அருகில் உள்ள நகரொன்றில் இடம்பெற்ற இவ்வாறானா தீ விபத்தின் போது குறைந்தது 71 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7