பொன்னேரியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் பிரசாரத்தில் உரையாற்றிய அவர், “குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைத்து மக்களும் ஐ.பி.எல். விளையாட்டை பார்ப்பது போன்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைத்து விட்டால் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடுவோம் எனப் பயந்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து சின்னம் கிடைக்காதவாறு முடக்கியுள்ளனர்.
ஆர்.கே. நகரில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் போன்று அனைத்து தொகுதியிலும் சுயேட்சை சின்னத்தில் வெற்றி பெறுவோம். மக்கள் ஆதரவு இருக்கும்போது வெற்றி பெறுவதற்கு சின்னம் ஒரு பிரச்சினை இல்லை. எங்களுக்கு சின்னம் என்பது முக்கியமல்ல மக்களின் எண்ணம் தான் முக்கியம்” எனக் கூறினார்






