அந்த மாளிகையில் தற்போது 160 க்கும் மேற்பட்ட பீடங்களில் அரிய வகை பொக்கிஷங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த அரிய பொக்கிஷங்கள், இஸ்லாமிய அரசு போராளிகள் ஈராக்கின் பல பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது சூறையாடப்பட்டிருந்தன.
சுமார் 2020 பாரம்பரிய மற்றும் அரிய வகை தொல்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த காட்சியகம் கடந்த 19 ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு பெரும்பான்மையாக அசீரியன் சகாப்தத்தில் மீட்கப்பட்ட பொருட்களே உள்ளதுடன், குறிப்பாக அவை கிறிஸ்துவுக்கு முன் 6000 தொடக்கம் கிறிஸ்து வருடம் 1500 ஆம் வரையான காலப் பகுதியைச் சார்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அசீரிய, பேபிலோனியன், சுமேரிய சகாப்தங்களின் போது மீட்கப்பட்ட அரும் பொருட்களாக இருப்பதாக பஸ்ராவின் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய துறையின் பணிப்பாளர் Qahtan al-Obeid தெரிவித்தார்.
அத்துடன் அயல் நாடுகளான ஜோர்டான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்தே அதிகளவான அரும் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யுனேஸ்கோவினால் இயந்திர கைத்தொழில் வளர்ச்சியின் ஆரம்ப படிக்கல்லாக திகழ்ந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 2014 ஆம் 2015 ஆம் ஆண்டுகளில் கைப்பற்றிய இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அந்த பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை உடைந்தெறிந்தனர்.
அத்துடன் உருவ வழிபாடு சார்ந்த பகுதிகளையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் குழு அழித்தொழித்தது. சிரியா மற்றும் ஈராக்கில் இருந்த கலிபா போன்ற வழிபாட்டுத் தலங்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அதேவேளை வேறு சிலர் இந்த வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை கடத்துவதன் ஊடாக ரகசியமாக வருமானத்தை பெற்றுக் கொண்டனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 14000 பொருட்கள் சர்வதேச ரீதியாக கடத்தல்களுக்கு உட்பட்ட போது சர்வதேச சுங்க அமைப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
