
சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பேரழிவை சந்தித்திருந்த மொஸம்பிக் தற்போது மலேரியா, கொலரா போன்ற தொற்று நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
இயற்கை பேரழிவில் நூற்றுக் கணக்கானோர் உயிரிந்த நிலையில், தற்போது பலரும் தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் ஐவர் கொலரா நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொலரா நோய் விரைவாக தொற்றக் கூடியமையால் பெருமளவான நோயாளர்கள் அடையாளம் காணப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இம்மாதத்தின் நடுப்பகுதியில் தென் ஆபிரிக்காவின் பல்வேறு பகுதிகளை தாக்கிய இயற்கை பேரழிவினால் சுமார் 700 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
